வரவேற்கிறோம்
தமிழ் ஒலி களஞ்சியம்
வானலைகளில் இதுவரை நான்.....
11வயதில் ஆரம்பித்த பயணம் . அழையாவிருந்தாளியாய் இலங்கை வானொலிக்கலையகத்தில் அடியெடுத்து வைத்தேன். சிறுவர் மலரைப் பார்க்க, நண்பன் ஜோசப்எட்வர்டுக்கு வந்த அழைப்போடு ஒட்டிக்கொண்ட நாள் அது. பச்சைமலைத்தீவு தொடர் நாடகத்தில் பூதமாக நடித்து வந்த சிறுவனுக்கு , அன்று உடல்நிலை , சரியில்லை. வேடிக்கை பார்க்க வந்திருந்தவர்களுக்குக் குரல்பரிசோதனை . அடித்தது அதிர்ஷ்டம். தொடர்ந்து எனக்கே வாய்ப்பு. அதனைத் தாரைவார்த்துக் கொடுத்தவன், பின்னாளில் என் உடன்பிறவாச் சகோதரனான, எஸ்.ராமதாஸ் (மரிகார்).
வானொலி மாமாக்களான, எஸ்.நடராஜன், கருணைரத்தினம், வி.ஏ.கபூர், சரவணமுத்துமாமா ஆகியோர் மறக்க முடியாதவர்கள்.
( வானொலி அக்கா பொன்மணி குலசிங்கத்தின் அரவணைப்போ அறிவிப்பாளரான பின்னரும் தொடர்ந்தது). மீசையரும்பும் பருவத்தில் இளைஞர் மன்றத்துக்குப் பதவியுயர்வு. வானொலி அண்ணா வ.அ.ராசையா அவர்களது வழிகாட்டல் ஒரு இலக்கியம். விடலைப்பருவத்திலேயே கல்விச்சேவைப்பகுதி, மற்றும் தேசியசேவையின் நாடகம், உரைச்சித்திரம், முஸ்லிம் சேவையின் நாடகம் உரைச்சித்திரம், அனைத்திலும் கலைஞராகத் தேர்வு செய்யப்பட்டு கணிசமான சன்மானத்தைக் கைநிறைய உழைக்கும் காலம்பிறந்தது.
மேலும் படிக்ககாலச்சுவடு
நேர்கானல்
நடிகர்திலகம்
"சிவாஜிகனேசனுடன்"
இனிமையான பாடல்களைக் கேளுங்கள்
பாடல் வரிகள் பி.எச். அப்துல் ஹமீத்
நாங்கள்
வானொலி மற்றும் டி.வி. வணிகத்தை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்கள்
பிரபலமான நபர்களுடன் சிறப்பு நேர்காணல்கள்
வானொலி நிகழ்ச்சிகள்
பத்திரிகை நிகழ்ச்சிகள்
உங்களிடம் ஏதாவது கேள்வி இருக்கிறதா ?
தொடர்பு
எங்களின் சிறந்த
நினைவுத்திரை
பாடகர் கே . ஜே . யேசுதாசுடன்
அப்துல் ஹமீதுக்கு மாலைமரியாதை நடிப்புலக மாமேதையிடம் இருந்து
பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியில் கமலின் அன்பு " பொன்னாடையாக " அப்துல் ஹமீதை அரவணைக்கிறது
" சிவாஜிக்கு முதல் மரியாதை விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா பொன்னாடை போர்த்தி கௌரவிக்கிறார் "
அண்ணன் சிவாஜியின் அன்புக்கரங்களால் தங்கமாலைப் பரிசு
மெல்லிசை மன்னர் எம் . எஸ் . வியுடன் அவரது இல்லத்தில் ஒரு சந்திப்பு
தெனாலி படத்துகாக வசன ஒத்திகை
இசைப்புயலுடன் அவரது இல்லத்தில்
நிகழ்வுகள்
லண்டன் - பிபிசி 100 ஆண்டுகள் பழமையானது
London -BBC க்கு 100 வயது. 1922 October 22 அன்று British Broadcasting company என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட BBC, தனது நூற்றாண்டு விழாவினைக் கோலாகமாகக் கொண்டாடி மகிழப்போகிறது. இதன் ஆரம்பகால பங்குதாரர்கள...
மேலும் பார்க்க
அப்துல் ஹமீத் வழிப்போக்கன் அல்ல வழிகாட்டி
அன்பு அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் அவர்கள் எழுதியுள்ள வானலைகளில் ஒரு வழிப்போக்கன் நூல் அறிமுக விழா “அப்துல் ஹமீத் வழிப்போக்கன் அல்ல வழிகாட்டி” -பேரா.மு.நித்தியானந்தன் அன்பு அறி...
மேலும் பார்க்கவலைப்பதிவுகள்
‘தலைமுறை தாண்டியும் தமிழ்’ என்ற மையக்கருவில் ஒருங்கிணைக்கப்பட்ட இம்மாநாடு வழக்கமான இலக்கிய மாநாடுகளில் இருந்து சிறப்பான வேறுபாடுகள் சிலவற்றைக் கொண்டிருந்தது. அதன் ஓர் அங்கமாக அமைந்தது அ...
மேலும் பார்க்க
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் முத்தமிழ்ப் பெருவிழா மேடையில், அடியேனது நூல் வெளியிடப்பட்ட மகிழ்வை உங்களோடும் பகிர்ந்துகொள்கிறேன்… வட மெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் பெருந்தலைவர் திர...
மேலும் பார்க்க