வலைப்பதிவு விவரங்கள்

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் முத்தமிழ்ப் பெருவிழா மேடையில்

பின் செல்ல
IMG

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் முத்தமிழ்ப் பெருவிழா மேடையில், அடியேனது நூல் வெளியிடப்பட்ட மகிழ்வை உங்களோடும் பகிர்ந்துகொள்கிறேன்…

வட மெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் பெருந்தலைவர் திரு. கால்டுவெல் வேல்நம்பி அவர்கள் வெளியீட்டு விழாவை வழிநடத்திவைக்க, அறிஞர் பெருமக்கள், புகழ்மிகு தொழில்முனைவோர், மற்றும் புரவலர் பெருமக்கள் பலர் முன்னிலையில் நடந்தஇவ்விழாவில், இவ்வாண்டு, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் ‘உலகத்தமிழ்ப் பீட விருது’ வென்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் நூலின் முதல் பிரதியைவெளியிட்டார்.

மற்றுமொரு பிரதியை நடிகரும் தற்போது அமெரிக்க மண்ணிலேமுன்னணித் தொழில்முனைவராகவும் விளங்கும் நெப்போலியன் அவர்கள்வெளயிட்டார். இவ்விழாவில் 2011-ஆம் ஆண்டு ‘காவல்கோட்டம்’ என்ற நூலுக்காக, ‘சாகித்திய அகாதமி விருது’ வென்ற எழுத்தாளரும், இந்திய அரசில் மதுரைத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக விளங்குபவருமான திரு. சு.வெங்கடேசன்அவர்களும், ஓர் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டார். அத்துடன் நடிகரும், இயக்குனருமான திரு. பாண்டியராஜன், வேலூர் தொழில் நுட்பக்கழகத்தின் நிறுவனர், துணை வேந்தர்,முன்னாள் நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர் திரு.கோ.விஸ்வநாதன் அவர்கள், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தின் புதியதலைவராகத் தெரிவாகியுள்ள திரு. பாலா சுவாமிநாதன், மற்றும் அமெரிக்க, கனேடிய முன்னணித் தொழில் முனைவோர் பலரும் கலந்து சிறப்பித்தார்கள். (இந்நிழற் படங்களைப் பதிவு செய்து அனுப்பிய நமது மண்ணைச் சேர்ந்த சகோதரர் ரஞ்சித் சுப்ரமணியம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி) இந்நூல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி கனேடிய மண்ணில் டொரோண்டோநகரில் கனேடியத் தமிழோசை வானொலி மற்றும் சினி மீடியா ஏற்பாட்டில் வெளியிட்டுவைக்கப்படும்.
 
அத்துடன் ‘உலகத் தமிழ்க் கலையகத்தின்’ ஏற்பாட்டில், எதிர்வரும்ஒக்டோபர் மாதம் 8ம் திகதி, லண்டன் மாநகரிலே புகழ் பூத்த  ‘வின்ஸ்டன் சேர்ச்சில்’ மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்படவிருக்கிறது.