வலைப்பதிவு விவரங்கள்

இன்று மலேசியாவின் தேசிய பன்பலை வானொலி ’மின்னலின்’

பின் செல்ல
IMG

இன்று மலேசியாவின்  தேசிய பன்பலை வானொலி ’மின்னலின்’அழைப்பினை ஏற்று ஒரு 'செவ்வியில்' கலந்துகொள்ளச் சென்றிருந்த பொழுது மனமகிழ்ச்சியைத் தந்த இரு விடயங்கள்.

1. அவர்கள், தமிழைத் தமிழாகப் பேசியது.

2. என்னைச் செவ்வி கண்ட இளம் அறிவிப்பாளர் சகோதரி ‘திரேசா லாஸரூ(Tresa Lazaroo) மிகக் குறுகிய கால இடைவெளியில் என்னைப்பற்றிய தகவல்களை எல்லாம் தேடித் திரட்டி,  நீண்ட ஆய்வு செய்து சிறப்பான கேள்விகளுடன் தயாராக இருந்தது.

தனியார் வானொலிகளை விட, ‘மின்னல்’ பன்பலை (தேசிய) வானொலிக்கு பெரும் வரவேற்பும் அங்கீகாரமும் மக்கள் மத்தியில் இருப்பதை,  பலரோடு பழகியபோது அறிந்து ஆச்சரியப்பட்டேன்.


வானொலி என்பது வெறும் ‘பாட்டுப் பெட்டி’ அல்ல.


இனிப்பூட்டப்பட்ட மருந்துபோல, ஜனரஞ்சக அம்சங்களோடு இணைத்து, அறிவார்ந்த நிகழ்ச்சிகளையும், நல்ல பயனுள்ள தகவல்களையும் தந்து, பொது அறிவையும் வளர்த்து வருவதனாலேயே, இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது என்பதையும் புரிந்து கொண்டேன்.