வரவேற்கிறோம்
தமிழ் ஒலி களஞ்சியம்
காற்றுவெளியினில் இதுவரை நான் ...
11 வயதில் ஆரம்பித்த பயணம் . அழையாவிருந்தாளியாய் இலங்கை வானொலிக்கலையகத்தில் அடியெடுத்து வைத்தேன். சிறுவர் மலரைப் பார்க்க , நண்பன் ஜோசப்எட்வர்டுக்கு வந்த அழைப்போடு ஒட்டிக்கொண்ட நாள் அது. பச்சைமலைத்தீவு தொடர் நாடகத்தில் பூதமாக நடித்து வந்த சிறுவனுக்கு , அன்று உடல்நிலை , சரியில்லை. வேடிக்கை பார்க்க வந்திருந்தவர்களுக்குக் குரல்பரிசோதனை . அடித்தது அதிர்ஷ்டம். தொடர்ந்து எனக்கே வாய்ப்பு. அதனைத் தாரைவார்த்துக் கொடுத்தவன், பின்னாளில் என் உடன்பிறவாச் சகோதரனான, எஸ்.ராமதாஸ் (மரிகார்).
வானொலி மாமாக்களான, எஸ்.நடராஜன், கருணைரத்தினம், வி.ஏ.கபூர், சரவணமுத்துமாமா ஆகியோர் மறக்க முடியாதவர்கள்.
( வானொலி அக்கா பொன்மணி குலசிங்கத்தின் அரவணைப்போ அறிவிப்பாளரான பின்னரும் தொடர்ந்தது). மீசையரும்பும் பருவத்தில் இளைஞர் மன்றத்துக்குப் பதவியுயர்வு. வானொலி அண்ணா வ.அ.ராசையா அவர்களது வழிகாட்டல் ஒரு இலக்கியம். விடலைப்பருவத்திலேயே கல்விச்சேவைப்பகுதி, மற்றும் தேசியசேவையின் நாடகம், உரைச்சித்திரம், முஸ்லிம் சேவையின் நாடகம் உரைச்சித்திரம்...
மேலும் படிக்ககாலச்சுவடு
நேர்கானல்
நடிகர்திலகம்
"சிவாஜிகனேசனுடன்"

இனிமையான பாடல்களைக் கேளுங்கள்
பாடல் வரிகள் பி.எச். அப்துல் ஹமீத்
நாங்கள்
வானொலி மற்றும் டி.வி. வணிகத்தை தயாரிப்பதில்
நிபுணத்துவம் பெற்றவர்கள்
பிரபலமான நபர்களுடன் சிறப்பு நேர்காணல்கள்
வானொலி நிகழ்ச்சிகள்
பத்திரிகை நிகழ்ச்சிகள்
உங்களிடம் ஏதாவது கேள்வி இருக்கிறதா ?
தொடர்புக்கு

எங்களின் சிறந்த
நினைவுத்திரை

அண்ணன் சிவாஜியின் அன்புக்கரங்களால் தங்கமாலைப் பரிசு

கவிப்பேரரசு வைரமுத்து பொன்னாடை போர்த்தி விருதும் வழங்குகிறார்

தெனாலி படத்துகாக வசன ஒத்திகை

" சிவாஜிக்கு முதல் மரியாதை " விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா பொன்னாடை போர்த்தி கௌரவிக்கிறார்

சீஷெல்ஸ் நாட்டிற்குச் சென்ற கலைக்குழு எஸ் . பி .பி மற்றும் இசைக்குழு அந்த இயற்கைச் சூழலில் மெய் மறந்து அமைதியிலேயே உருவான இசைக்குயில் எஸ் . ஜானகி ஆடவும் செய்தார்

இசைப்புயல் யு.சு.ரஹ்மான் திருமண வரவேற்பில் அப்துல் ஹமீத் தம்பதி

உலக அறிவிப்பாளருக்குப் பாராட்டு விழா ஜூலை 31 - 2004 ஃபெயர்ஃபில்ட் மண்டபம் க்றோய்டன் லண்டன்

இசைப்பயணம் படப்பிடிப்பில் நடிகர் விஜயகுமாருடன் அப்துல் ஹமீத்